தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கடுமையாகச் சாடியுள்ளார். அதிமுக வெளியிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ‘வெத்து வேட்டு’ என்றும், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் எதை வேண்டுமானாலும் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இது போன்ற கவர்ச்சிகரமான, ஆனால் செயல்படுத்த முடியாத அறிவிப்புகளைச் செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் எவ்வித இழுபறியும் இல்லை என்றும், திருமாவளவன் மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டுச் சென்றார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் உதயநிதிக்கு இடையூறு ஏற்படும் என சீமான் கூறியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் பதிலளித்தார். திமுக கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாகவும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில், தனது 24 வயது மகனைக் கொலை செய்த வழக்கில் 44 வயதுத் தாயும் அவரது…
மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…