“எங்களுக்கு போட்ட பிச்சை கூட ஸ்டாலினுக்கு கிடைக்கல”…. திமுகவை கதறவிட்ட துரை வைகோ….. தமிழக அரசியலில் பெரும் புயல்….!

Spread the love

மிசா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறை சென்றதன் பின்னணி குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பெரும் விவாதம் வெடித்துள்ளது. இந்த நிலையில், தவெக கூட்டணியில் உள்ள மதிமுக எம்பியான துரை வைகோ, “ஸ்டாலின் மிசா காலத்தில் கைதானது உண்மைதான் என்றாலும், அது முழுமையான அரசியல் காரணங்களுக்காக அல்ல” என்று கூறிய கருத்து திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர், துரை வைகோவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ‘திமுக போட்ட பிச்சை’ என சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

திமுகவினரின் இந்த விமர்சனத்திற்கு திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ காட்டமாக பதிலளித்தார். அவர் பேசுகையில், “கூட்டணி கட்சிகளின் உழைப்பும், மக்களின் ஆதரவும்தான் ஒரு தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கிறதே தவிர, இது யார் போடும் பிச்சையும் கிடையாது. திமுகவினர் என்ன மன்னர்களா அல்லது சக்கரவர்த்திகளா? தேர்தல் என்று வரும்போது 20 முதல் 30 இயக்கங்கள் இணைந்துதான் களத்தில் உழைக்கின்றன. திமுக தொண்டர்களின் பங்களிப்பு முதன்மையானதுதான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், மக்கள் அளித்த வாக்கால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம். மக்களே எஜமானர்கள் எனும் போது, இதை ‘பிச்சை’ என்று சொல்வது ஜனநாயகத்திற்கும் சமூகத்திற்கும் எதிரானது” எனக் கூறி தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் திராவிட இயக்கங்களின் தற்போதைய செயல்பாடுகளை விமர்சித்த அவர், “பண்ணையார் அரசியல் கூடாது என்று சொல்லிதான் 1967-ல் பேரறிஞர் அண்ணா ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதன் விளைவாகவே எளிய பின்னணி கொண்டவர்கள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாக மாற முடிந்தது. ஆனால், அண்ணா கொண்டு வந்த மறுமலர்ச்சியை மறந்து இன்று திராவிட இயக்கங்கள் மீண்டும் பண்ணையார் அரசியலையே கையில் எடுத்துள்ளன. தற்போதைய தேர்தலில் ‘எவ்வளவு முதலீடு செய்வீர்கள்?’ என்று கேட்கும் நிலைக்கு அரசியல் தள்ளப்பட்டுவிட்டது. இந்த தவறான நடைமுறைகளுக்கெல்லாம் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தான் லஞ்சமற்ற, ஊழலற்ற அரசியலை வழங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்ப்.

இறுதியாக திமுகவின் ‘பிச்சை’ வார்த்தைப் பிரயோகத்தையே ஆயுதமாக வைத்து ஸ்டாலினை சாடிய துரை வைகோ, “இனி வரும் தேர்தல்களில் யார் போடும் பிச்சையால் வெற்றி பெறுகிறோம் என்பது வெளிச்சத்திற்கு வரும். சரி, அவர்கள் சொல்லும் அந்த ‘பிச்சை’ என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்வோம். தேர்தலில் கூட்டணி கட்சிகள் கேட்டு மக்கள் போட்ட வாக்குகளால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், உண்மை என்னவென்றால், கொளத்தூர் தொகுதியில் எங்களுக்கு மக்கள் போட்ட அந்த வாக்கு பிச்சையைக் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் போடவில்லை” என்று கூறி திமுக முகாமிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

55 seconds ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

11 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

15 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

25 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

36 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

54 minutes ago