“இடைத்தேர்தலில் அது இல்லனா டெபாசிட்டே காலி”…. திமுகவை பப்ளிக்காக அவுட் ஆக்கிய துரை வைகோ…. பரபரப்பு பேட்டி….!

Spread the love

திருச்சி மன்னார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தைத் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்சி மெயின் கார்டு கேட் அருகே நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாவது குறித்துக் கவலை தெரிவித்தார். ரயில்வே துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி, அப்பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், தமிழ் திரையுலகில் கானா பாடல்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றுத் தந்த இசைமைப்பாளர் தேவா அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு எனக் குறிப்பிட்டு, மதிமுக சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது இந்தியா முழுவதும் எஸ்ஐஆர் (SIR) முறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ஆனால் தமிழ்நாட்டில் திமுக அதனைத் தடுத்ததாகவும் துரை வைகோ சுட்டிக்காட்டினார். இருப்பினும், தற்போதைய தேர்தல் தோல்விக்கு எஸ்ஐஆர் அமைப்பே காரணம் என்று திமுக தரப்பில் கூறப்படுவதை அவர் கடுமையாக விமர்சித்தார். பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு போன்ற ஆளுமைகளுக்கே தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில், திமுக தனது தோல்வியை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து, எஸ்ஐஆர் மீது பழியைப் போடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக தன்னிச்சையாக 30 சதவீத வாக்குகளைப் பெற்றதாகக் கூறுவதை துரை வைகோ மறுத்தார். பிரேமலதா விஜயகாந்த், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா மற்றும் தமீமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் தலைவர்களின் தீவிர பிரச்சாரத்தால்தான் திமுகவிற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன என்றும், அவர்களின் ஆதரவு இல்லையென்றால் திமுகவிற்கு டெபாசிட்டே கிடைத்திருக்காது என்றும் அவர் கூறினார். மேலும், தேர்தலில் தோற்றாலும் வெற்றி பெற்றதாகக் கூறி மக்களை ஏமாற்றும் போக்கைக் கண்டித்த அவர், கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் தாங்கள் ஏமாந்தது போல தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

தேர்தலில் பண பலம் குறித்துப் பேசிய துரை வைகோ, திமுக நேரடியாகப் பணம் கொடுக்கவில்லை என்றாலும், நல்லது கெட்டது என்று இரண்டு தொகுதிகளிலும் ரூ. 100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், ஒரு காசு கூட செலவு செய்யாமல் தவெக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், விஜய் வெற்றியை கொச்சைப்படுத்துவது தவறான அணுகுமுறை என்றார். மேலும், மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் மதிமுக போட்டியிடுவது குறித்துத் கட்சியின் தலைமையும், கூட்டணித் தலைவர் விஜயும் இணைந்து உரிய முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

29 seconds ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

11 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

14 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

25 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

35 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

54 minutes ago