Categories: சினிமா

சின்மயி-VTV கணேஷ் விவகாரம்.. டப்பிங் யூனியனில் தலை தூக்கிய பிரச்சனை.. இதுக்கு ஒரு End-ஏ இல்லையா..?

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். படம் ஆரம்பத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது. லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த பிரச்சினை ஓய்வதற்குள் ட்ரெய்லரில் விஜய் பேசிய மோசமான வார்த்தையை வைத்து பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஆனால் விஜய் அந்த வார்த்தையை பேசியதற்கு நான் தான் காரணம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்க முடியாமல் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

வருகிற 19ஆம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், ஆங்காங்கே பிரச்சனைகளும் கிளம்பி வருகிறது. லியோ படத்தில் நான் ரெடி பாடலுக்கு நடனமாடிய 1200 பேரில் பலருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் போராட்டம் நடத்துவோம் எனக் கூறியிருந்த நிலையில் அந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது. இந்நிலையில் லியோ படம் முழுவதும் த்ரிஷாவுக்கு பாடகி சின்மயி டப்பிங் பேசியுள்ளார்.

அவர் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லை. எனவே சின்மயி எப்படி டப்பிங் பேசலாம் எனக் கூறி யூனியன் அமைப்பை சேர்ந்த சிலர் பிரச்சனை செய்துள்ளனர். ஏற்கனவே VTV கணேஷ் ஜவான் படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். அவரும் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாததால் பிரச்சனை கிளம்பியது. அப்படி இருக்க லியோ படத்தில் திரிஷாவுக்கு முழுவதுமாக டப்பிங் பேச சின்மயிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் எனக் கூறி டப்பிங் யூனியன் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் தரப்பு எப்படி சுமூகமாக முடிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

admin

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

7 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

7 மணத்தியாலங்கள் ago