Categories: சினிமா

நான் 5000 படத்துக்கு மேல.. 2 பேரும் 10 வருஷமா Car-ல தான் குடும்பமே நடத்துனோம்.. நடிகர் சுந்தர்ராஜனின் மனைவி பகிர்ந்த சுவாரசிய தகவல்..

Spread the love

மெல்லத் திறந்தது கதவு, நான் பாடும் பாடல், அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாதி ராஜா போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். ஒரு காலகட்டத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். திருமதி பழனிசாமி, அமைதிப்படை, தசாவதாரம், என் புருஷன் குழந்தை மாதிரி, சூரிய வம்சம், நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அப்பா, அண்ணன், மாமா போன்ற கேரக்டரில் அவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இயக்குநர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜனின் மனைவியும் சினிமா கலைஞர்தான். அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்த துர்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நதியா, மனிஷா கொய்ராலா, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ரேகா, ஜெயசுதா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பேசி இருக்கிறார். அதுபோல் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஆர்ட்டிஸ்ட் பலருக்கும் துர்கா அதே போன்ற மழலை குரலில் டப்பிங் பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 5000 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார் துர்கா.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் துர்கா சுந்தர்ராஜன் கூறியதாவது, எங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த நிலையில், அவரும் பயங்கர பிஸியாக இருந்தார். நானும் பல படங்களில் கமிட் ஆகி டப்பிங் பேசுவதில் பிஸியாக இருந்தேன். அவர் கோயம்புத்தூர், கொடைக்கானல், ஊட்டி என வெளியூர்களுக்கு மாதக்கணக்கில் சென்றுவிடுவார். சென்னை வரும்போது மட்டும் தான் நாங்கள் சந்திப்போம். அதுவும் வீட்டில் இருந்து காரில் அவர் நான் டப்பிங் பேசும் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார்.

பிறகு என்னை காரில் அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே போவார். நானும் பிள்ளைகள் படிப்பு, வீட்டு செலவு, அவர் ஷூட்டிங் சென்றது முதல் இதுவரை நடந்த குடும்ப விஷயங்கள், என் பணி சார்ந்த விஷயங்கள் என பேசுவேன். அதே போல் அவரும் பல தகவல்களை என்னிடம் பரிமாறிக்கொள்வார். பிறகு விமானத்துக்கு செல்ல அவர் கிளம்பி விடுவார். இப்படித்தான் 10 ஆண்டுகளாக நாங்கள் காரில் குடும்பம் நடத்தினோம் என்று கூறியிருக்கிறார் துர்கா சுந்தர்ராஜன்.

admin

Recent Posts

“அரசுப் பள்ளிச் சாம்பாரில் கொடூரம்”…. மாணவி கையில் சாணிப்பவுடர் கொடுத்து செய்யச் சொன்னது யார்?…. சத்தியமங்கலத்தில் பகீர்…. கொந்தளித்த வானதி சீனிவாசன்…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…

3 minutes ago

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

14 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

19 minutes ago

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

27 minutes ago

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

35 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

44 minutes ago