சீருடைக்கே பயமில்லையா?… போதை ஆசாமிகளின் வெறிச்செயல்… நடுரோட்டில் காவலர்கள் சரமாரியாக தாக்குதல்… உச்சக்கட்ட கொந்தளிப்பு…!!

Spread the love

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ராஜகண்ணன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் ஆகிய இருவரும் ரோந்து சென்றபோது, சிலுப்பனூர் பகுதியில் மூன்று இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, நள்ளிரவு நேரத்தில் இவ்வாறு மது அருந்துவது தவறு எனக் கூறி அவர்களை எச்சரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அதிகாலை நேரத்திலும் அதே நபர்கள் மீண்டும் மது அருந்திக் கொண்டிருந்ததைக் கண்ட காவலர்கள், அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூன்று பேரும் காவலர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. காவலர் ராஜகண்ணனுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சக காவலர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் வெங்கடேசனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன், தாமரைக்கண்ணன், இளம்பரிதி ஆகிய மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரோந்துப் பணியில் இருந்த காவலர்களுக்கே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

8 மணத்தியாலங்கள் ago