“ஸ்பீடா ஓட்டுனா என்ன தப்பு… என் அப்பா பார்த்துப்பார்”….. 19 வயது இளைஞரின் திமிர்பேச்சு….. பிறந்தநாள் காரால் பறிபோன 3 இளம் உயிர்கள்….!

Spread the love

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் பரிசாகப் பெற்றோர் வழங்கிய அதிவேக மினி கூப்பர் காரை, 19 வயதான சுஹைல் சஞ்சீவ் என்பவர் மதுபோதையில் தாறுமாறாக ஓட்டியுள்ளார். அப்போது, அதே சாலையில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது பின்னால் இருந்து கார் பயங்கரமாக மோதியதுடன், அந்த இருசக்கர வாகனத்தை சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று நின்றது.

இந்த கொடூர விபத்தில் வயநாட்டைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த இஜாஸ் (21) ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்கள், நள்ளிரவில் தேநீர் அருந்துவதற்காக விமான நிலையப் பகுதிக்குச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கோபிகாவும் தேவிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இஜாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

விபத்து ஏற்படுத்தியதோடு நில்லாமல், மூன்று உயிர்கள் பறிபோன பிறகும் தன் தவறை உணராமல் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் திமிராகப் பேசியது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “இது ஏர்போர்ட் ரோடு, வேகமாக ஓட்டுவதில் என்ன தவறு? என் அப்பா இதைப் பார்த்துக் கொள்வார்” என அவர் அலட்சியமாகக் கூறியதாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கேரளாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 என்றிருக்கும் போது, 19 வயது இளைஞருக்கு மதுபானம் வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

சம்பவத்தையடுத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுஹைல் சஞ்சீவை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் செல்லமாக வழங்கிய உயர் ரக வாகனம் மற்றும் முறையற்ற மது அருந்தும் பழக்கம் மூன்று இளம் உயிர்களைப் பறித்துள்ள இந்தச் சம்பவம், சாலைப் பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகிவரும் அதிவேக வாகன ஓட்டுநர் கலாச்சாரம் குறித்த கடுமையான விவாதங்களை மீண்டும் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

12 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

29 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

33 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

53 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

56 minutes ago