“டேய் என் தங்கச்சிய போய் இப்படி பண்ணிட்டியே”… மது குடிக்க வைத்து இளைஞரை குத்தி கொன்ற நண்பர்கள்… தூத்துக்குடியில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் இருந்து வெள்ளப்பட்டி செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்து நகர் அருகே உள்ள துரைசிங் நகர் பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன் என்பவர் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மகன் சூர்யா (21) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றார். அதேசமயம் கஞ்சா போதைக்கு அடிமையான சூர்யா அடிக்கடி அதனை பயன்படுத்தியுள்ளார். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சூர்யா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நண்பர்கள் மூன்று பேருடன் மது குடிக்க அந்தோணியார் கோவில் பின்புறம் உள்ள முட்புதர் நிறைந்த காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து சூர்யாவை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் உத்தர கண்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள் மாரிமுத்து சூர்யா, இசக்கி ராஜா, மகேந்திரன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், உத்திரக்கண்ணன் சகோதரியை சூர்யா கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பருடன் சேர்ந்து சூர்யாவை மது குடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. தூத்துக்குடியில் தங்கையை கிண்டல் செய்த சூர்யா என்ற வாலிபர் காட்டுப்பகுதியில் வைத்து நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

மேல்மா சிப்காட் விவகாரத்தில் அதிரடி திருப்பம்…. நடு இரவில் வெளியான முக்கிய அறிவிப்பு…. கடைசி நிமிடத்தில் ரத்தான அரசாணை….!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமையவிருந்த மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு…

40 seconds ago

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை கவலைக்கிடம்…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

கொளத்தூர் தொகுதி பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ஆரோக்கியம் குறித்து அமைச்சர்…

10 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் மனுஷங்களா… மருமகளைக் கொடூரமாக தாக்கிய மாமியார், நாத்தனார்… உ . பி – யில் அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது மாமியார் மற்றும் நாத்தனாரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ…

11 minutes ago

பாமக எடுத்த ‘திடீர்’ முடிவு… அதிர்ச்சியில் எடப்பாடி… இடைத்தேர்தலில் ஆட்டம் கண்ட அதிமுக…. கடைசி நேரத்தில் அன்புமணி வைத்த ‘செக்’….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…

16 minutes ago