திமுகவின் மொத்த அதிகாரமும் இனி இவர்களிடமா…? 234 தொகுதிகளுக்கும் தனி செயலாளர்கள்… உதயநிதியின் மாஸ்டர் பிளான்….!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவை அடிமட்டத்திலிருந்து அடியோடு மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டதோடு, கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியைச் சந்தித்தது தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கட்சியின் பலம் வாய்ந்த 15க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களும் படுதோல்வி அடைந்துள்ளதால், தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்து கட்சியை மீண்டும் வலுப்படுத்த திமுக தலைமை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மறைமுகமாக முன்னெடுத்து வருகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் திமுகவின் கள ஆய்வுக் குழுக்கள் நேரடியாகச் சென்று மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டன. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஒரு விரிவான அறிக்கை மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வில், பல மாவட்டங்களில் ஏற்பட்ட படுதோல்விக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளும், தவறான வேட்பாளர் தேர்வுகளுமே முக்கிய காரணம் என்று கட்சியினர் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக, திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர் தேர்வு முதல் உள்ளூர் நிர்வாகி நியமனம் வரை மிகப்பெரிய அதிகார மையங்களாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடிமட்டத் தொண்டர்கள் நேரடியாகத் தலைமையை அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த அதிகாரக் குவிப்பை உடைத்து, அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக ‘தொகுதிச் செயலாளர்’ என்ற புதிய சக்திவாய்ந்த பதவியை உருவாக்குவது குறித்து திமுக தலைமை தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இந்த அதிரடித் திட்டத்தின் பின்னணியில் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, தொகுதி அளவில் நேரடியாகச் செயல்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் தமிழகம் திரும்பியதும் இந்தத் திட்டம் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்தத் தொகுதிச் செயலாளர் பதவிகளில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய அரசியல் சக்திகளின் எழுச்சியை எதிர்கொள்ள, திமுகவின் அமைப்பை இளைஞர்களைக் கொண்டு அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தொகுதி வாரியாக கட்சிப் பணிகளையும் வாக்குச்சாவடி கட்டமைப்பையும் நேரடியாகக் கண்காணிக்க முடியும் என்றும், அடுத்த தலைமுறை தலைவர்களை தொகுதி அளவிலேயே உருவாக்க முடியும் என்றும் உதயநிதி தரப்பு கணக்கு போடுகிறது.

இருப்பினும், இந்த மறுசீரமைப்புத் திட்டத்திற்கு திமுகவிற்குள் சீனியர் நிர்வாகிகளிடையே முழுமையான ஆதரவு இல்லை என்றும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாக இருந்து வலுவான அதிகார மையங்களை உருவாக்கியுள்ள சீனியர்கள், தங்களது அதிகாரத்தைக் குறைக்க தலைமை முயற்சிப்பதாகக் கருதி அதிருப்தியில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தொகுதிச் செயலாளர் திட்டம் திமுகவை மீண்டும் வலுவான பாதையில் கொண்டு செல்லுமா அல்லது சீனியர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் இடையே புதிய அதிகார மோதலை உருவாக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

SATHISH R

Recent Posts

ஸ்கார்பியோ காரின் வெறித்தனமான ஸ்டண்ட்…! அலறியடித்து ஓடிய மக்கள்…. நடுரோட்டில் பயங்கரம்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…

3 minutes ago

“சூப்பர் உமன்”… எமனுக்கே சவால் விட்ட காதலி… மின்னல் தாக்கிய காதலன்… 2 முறை மறுபிறவி கொடுத்த வீரப்பெண்மணி… நடுங்க வைத்த இடி மின்னல்…!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…

4 minutes ago

தீபாவளி சர்ப்ரைஸ்..! பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… தேதி மாறுது… நவம்பர் 15 வரை காத்திருக்க வேண்டாம்… தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31…

10 minutes ago

ரியல் ஹீரோ!.. சமையலறையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ… தெய்வமாய் நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தை சாதுரியமாக…

18 minutes ago

“தோளில் கைபோட்டு செல்பி…” நடிகை ரச்சிதா ராமுவிடம் அத்துமீறிய நபர்…. மேடையில் பரபரப்பு… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்ட பிரபல கன்னட நடிகை…

24 minutes ago

“என் மகளுக்கு ஏன் இந்த அநீதி?”… விவசாயி வெளியிட்ட பகீர் வீடியோ… கண்ணீரில் கரையும் குடும்பம்… நடுங்க வைக்கும் உண்மை…!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்திலுள்ள போர்கோன் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான சங்கர் அப்பாராவ் கிஷிர்சாகர் என்ற விவசாயி, சோயாபீன்…

26 minutes ago