பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு வங்கியில், உலகையே உலுக்கும் வகையில் ஒரு விசித்திரமான மோசடி முயற்சி அரங்கேறியுள்ளது. எரிகா டி சௌசா என்ற பெண்மணி, உயிரிழந்த தனது மாமாவின் உடலை சக்கர நாற்காலியில் அமரவைத்து வங்கிக்கு அழைத்து வந்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 2.7 லட்சம் ரூபாய் கடனைப் பெறுவதற்காக, அந்த சடலத்தின் கையில் பேனாவைத் திணித்து கட்டாயப்படுத்தி கையெழுத்திட முயன்றுள்ளார்.
இதனால் “மாமா, நான் சொல்வதைக் கேட்கிறீர்களா? நீங்கள் கையெழுத்திட வேண்டும். நான் உங்களுக்காக இதைச் செய்ய முடியாது” என்று அந்த சடலத்துடன் அவர் பேசியதைக் கண்டு வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலை பின்னோக்கிச் சாய்ந்திருப்பதையும், அவர் எந்த அசைவும் இன்றி இருப்பதையும் கவனித்த வங்கி ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். அந்தப் பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை உணர்ந்த அவர்கள், உடனடியாகக் காவல்துறையினருக்கும் மருத்துவக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
“>
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், அந்த முதியவர் சில மணி நேரங்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இந்தத் துணிச்சலான மோசடி முயற்சியில் ஈடுபட்ட அந்தப் பெண்மணியைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் சடலத்தைத் தவறாகப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…