எனக்கு 6 தடவை ABORTION ஆனது ; கண்கலங்கிய டாக்டர் பாலின் மனைவி ப்ரியா பால்

By Deepika

Published on:

டாக்டர் பாலை தெரியாவதர்கள் இருக்கவே முடியாது. தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் பழனிசாமி அமெரிக்காவில் புகழ்பெற்ற டாக்டராக இருக்கிறார். இவரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. தன்னுடைய நேர்மையான பேச்சாலும், ஜாலியான அணுகுமுறையால் பிரபலமானவர். இவருடைய மனைவி பிரியா பாலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

DR Pal family

ப்ரியா பால் சரியான உணவுகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளார், அதுமட்டுமல்ல பல பெண்களுக்கு உணவுகள் பழக்க முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரால் பல பெண்கள் அவர்களின் உடல்நிலையில் மாற்றம் கண்டு, ஆரோக்கியமாக இருந்து வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்துள்ளது, அதுகுறித்து அவர் பேசியுள்ளார்.

   

ப்ரியா பால் கூறுகையில், நம் ஊரில் பெண்கள் திருமணமானால் மற்றவர்களுக்காவே வாழ்கிறார்கள், அதனாலே அவர்கள் அவர்களை கவனிப்பதில்லை. இதனால் பல பிரச்சனைகளை அவர் எதிர்கொள்கிறார்கள். நம் உடலில் வரும் அணைத்து பிரச்சனைகளுக்கும் நாம் தான் காரணம். எனக்கு பல பிரச்சனைகள் இருந்தது, காரணம் என் உணவு முறை தான். அதனால் நான் பாதிக்கப்பட்டேன். எனக்கு 5 முறை கருச்சிதைவு நடந்தது.

priya pal about her miscariage

ஒரு முறை குழந்தை பிறந்து இறந்தது, அவ்வளவு வேதனைப்பட்டேன். அதன் பின் என் உணவு பழக்கத்தை மாற்றினேன், நான் ஆரோக்கியமாக மாறினேன். எனக்கு அழகான குழந்தை பிறந்தது. அதனால் தான் நான் பெண்களுக்கு உதவ வேண்டும் என எண்ணி இந்தியா திரும்பினேன். இப்போது பல பெண்களுக்கு உதவி வருகிறேன். அதனால் பெண்கள் அவர்களை உணவு பழக்கங்களை மாற்றி கொள்ளுங்கள் என கூறியுள்ளார் ப்ரியா பால்.

 

author avatar
Deepika