பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் உட்கொள்ளும் உணவில் ஒன்று பால். பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும். நாம் தினம் தினம் வாங்கும் பால்களை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் தான் அருந்துவோம். ஏனெனில் நாம் வாங்கும் பால்களில் கிருமிகள் அதிகம் இருக்கும். அதனால் நன்கு கொதிக்க வைத்தால் கிருமிகள் அழிந்துவிடும் என்று நாம் காலம் காலமாக இந்த பழக்கத்தை கொண்டு வந்துள்ளோம். இதுபோன்று பாலைக் கொதிக்க வைத்து அருந்துவதற்கு மாட்டுப்பால் மட்டும் தான் பொருந்தும். தற்போது நகர்ப்புறங்களில் பெரும்பாலும் பாக்கெட் பால்களை தான் உபயோகிக்கிறார்கள் என்னதான் பாக்கெட் பாலாக இருந்தாலும் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தும் அதே போன்று கொதிக்க வைத்து தான் பயன்படுத்திக்காரர்கள் .
பாக்கெட் பாலை கொதிக்க வைக்கலாமா என்று கேள்விக்கு ஆலோசகரான டாக்டர் அருண்குமார் சமூக வலைத்தளத்தில் விளக்கம் கூறியுள்ளார். பாக்கெட் பாலில் பேஸ்டுரைசேஷன் என்ற செய்முறை செய்யப்படுகிறது. இந்த செய்முறை பாக்கெட் பாலை கெட்டுப் போகாமல் இருக்க உதவுமாம் . பாலை காய்ச்சுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது. வெப்பநிலை குறைவான நேரம் 72 டிகிரி செல்சியஸில் 15 லிருந்து 20 நொடிகள் சூடு படுத்தி பருகுவது. வெப்பநிலை குறைவான நேரம் 132 டிகிரி செல்சியஸில் 2நொடிகள் பாலைக் காயவைப்பது. இதுபோன்று வெப்ப நிலையில் பாலை சூடு படுத்தினால் பாக்கெட் பாலில் உள்ள சால்மோனெல்லா, ஈகோலை என்ற கிருமிகளை அழித்து விடும்.
எனவே நீங்கள் மாட்டுப் பாலை போல் பாக்கெட் பாலையும் கொதிக்க வைத்து தான் பருக வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதேபோல் பாக்கெட் பாலை கொதிக்க வைத்து பருகினாலும் எந்த தவறும் இல்லை. ஆனால் அடிக்கடி கொதிக்க வைத்தால் அதில் உள்ள சத்துகள் குறையும். அதேபோல் பாக்கெட் பாலை அதிகம் கொதிக்க வைத்தாலும் சுவை மேம்படும். பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சக்கரை கேரமலைஸ் ஆகி பாலின் சுவையை அதிகரிக்கும். பாக்கெட் பாலை கொதிக்க வைத்து பருகினால் எந்த தவறும் இல்லை நீங்கள் டீ காபி போடும்போது கண்டிப்பாக பாலை கொதிக்க வைத்து தான் ஆக வேண்டும், என்று டாக்டர் அருண்குமார் கூறினார். ஆகவே வீட்டில் பாக்கெட் பால் வாங்கினால் இது போன்ற செய்முறையில் செய்து பகிருங்கள்.
