பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக, சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்களும், இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் தற்பொழுது வரை விஜய் வர்மா, அனன்யா, பாவா செல்லதுரை, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, பிரதீப் என ஏழு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டது இணையத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்து, தற்பொழுது வரை பலதரப்பிரனும் பல்வேறு விதமான கமெண்ட்களை சொல்லி வருகின்றனர். இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் அடுத்த எவிக்சனும் வந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்கள் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது அறிய ஆவலாக உள்ளனர்.அதன்படி இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், ஆர் ஜே பிராவோ, ஐசு மற்றும் பூர்ணிமா போன்றோர் நாமினேசன் லிஸ்டில் உள்ளன.ர் இவர்களில் பூர்ணிமாவிற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்ததாக கூறப்படுகிறது .
மேலும் ஐசுவின் பெற்றோர்கள் அவரை வெளியே அனுப்ப கேட்டுக் கொண்டதன் காரணத்தினால், இந்த வாரம் ஐசுவும், பூர்ணிமாவும் வெளியே அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பாராததை எதிர் பாருங்கள் இதுதானே பிக் பாஸ்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…