பகீர் திருப்பம்..! குழந்தை சாவுக்கு தோசை மாவு காரணம் அல்ல… 200 பேர் வாங்கிய மாவு, ஒரு குடும்பம் மட்டும் பாதிப்பு எப்படி..? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

Spread the love

அகமதாபாத்தின் சந்கேடா பகுதியில் தோசை மாவு சாப்பிட்டதால் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட உணவு நச்சு (Food Poisoning) விவகாரம், தற்போது பெரும் மர்மமாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 3 மாதக் குழந்தை ரஹாவும், 3 வயது சிறுமி மிஷ்டியும் உயிரிழந்த நிலையில், அவர்களின் பெற்றோர் விமல் பிரஜாபதி மற்றும் பவானா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்ப்பால் மட்டுமே குடித்த 3 மாதக் குழந்தை இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது தடயவியல் நிபுணர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அதே கடையில் தோசை மாவு வாங்கிய சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், முதல் குழந்தையின் இறப்பை அமைதியாக மறைத்து அடக்கம் செய்த பெற்றோர், இரண்டாவது குழந்தை இறந்த பிறகு தாமதமாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இதனால் இது தற்கொலை முயற்சியோ அல்லது திட்டமிட்ட கொலையோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த மர்மத்தைத் துலக்க, ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட 3 மாதக் குழந்தை ரஹாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்களின் முன்னிலையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவில் நச்சு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் நச்சுப் பொருள் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தடய அறிவியல் ஆய்வகத்தின் (FSL) அறிக்கைக்காகப் போலீசார் காத்திருக்கின்றனர். உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

4 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

4 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

4 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

5 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago