தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என மும்முறமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதனுடைய அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகின்றன. இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கல் ஆக மாறியுள்ளது. இப்படியான நிலையில் விருதுநகரில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்கிறது.
உயர்த்தப்பட்ட ரயில் கட்டணமும் குறையவில்லை. பாஜக அரசுக்கு இது பற்றி எந்த கவலையும் கிடையாது. மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவி ஆகியோருக்கு சாதாரண மக்களைப் பற்றி கவலை கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என்பதை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். இருந்தாலும் விருதுநகர் காமராஜர் பிறந்த மண் என்பதால் இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எடுத்துக்கூறும். அதிக இடங்களை பெற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் பலருடைய விருப்பமாக உள்ளது.
வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து காலம் தான் அதற்கு பதில் சொல்லும். இந்தியா கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் விட்டுக் கொடுப்பதிலும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. கூட்டணியில் விட்டுக் கொடுப்பது மட்டும் காங்கிரசின் வேலையாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் வாக்கை வாங்கிக்கொண்டு அமைச்சராக இருக்கலாம் என்று எந்த கட்சி நினைத்தாலும் அது நடக்காது. காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை தர வேண்டும். அவ்வாறு செய்தால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருவார்கள். வெற்றி பெற அனைவருமே பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை மதிக்கவில்லை என்றால் முதலமைச்சராக வர முடியாது, நிலைமை வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று மாணிக்கம் தாகூர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…