மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் (Union Bank of India) 1,865 பயிற்சிப் பணியிடங்களுக்கான (Apprentice) புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 95 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற 20 முதல் 28 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு). இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 15,000 முதல் 18,000 ரூபாய் வரை உதவித்தொகை (Stipend) வழங்கப்படும்.
இதற்கான தேர்வு முறையானது ஆன்லைன் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு (Local Language Test) ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். பொது மற்றும் ஓபிசி பிரிவு ஆண்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.944-ம், ஓபிசி பிரிவு பெண்களுக்கு ரூ.708-ம், இதர பிரிவினருக்கு ரூ.236-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unionbankofindia.co.in என்ற முகவரியில் வரும் 19.05.2026-க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…