“தூங்காதே தம்பி தூங்காதே”… மந்திரி சபை கூட்டத்தில் தூங்கி வழிந்த ஜனாதிபதி டிரம்ப்… ஒட்டுமொத்த இணையத்தையும் அலறவிடும் வீடியோ…!

Spread the love

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதனிடையே நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் உள்ளிட்ட அனைத்து இலாஹா மந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நிறுத்தம், பொருளாதார நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தூங்கி வழிந்தார். மார்க்ரூபியோ உள்ளிட்ட மந்திரிகள் அவரை நிர்வாக திறன் குறித்தும் போர் நிறுத்த நடவடிக்கைகளின் ட்ரம்பின் ராஜதந்திரம் குறித்தும் புகழ்ந்து பேசினர்.

இருந்தாலும் அவற்றை எதுவும் காதில் வாங்காமல் ட்ரம்ப் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார். ஒரு சில சமயம் 15 நிமிடங்களுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு தூங்கினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்ரம்புக்கு 79 வயதாவதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் இவ்வாறு தூங்குகிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும் 3 மணி நேரம் மாறத்தான் கூட்டத்தை ட்ரம்ப் வெற்றிகரமாக கையாண்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

34 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

48 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

52 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

56 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

60 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

1 மணத்தியாலம் ago