நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் பாலம்! அறிவியலாளர்களை அதிரவைத்த மர்ம இடம்! திகில் கிளப்பும் ஒரு உண்மை கதை…

Spread the love

மனிதர்கள் தவிர வேறு எந்த உயிரினமும் வேண்டுமென்றே தனது உயிரை மாய்த்துக்கொள்ளுமா என்ன? யானை, சிங்கம், புலு, பாம்பு என எந்த உயிரினமும் தற்கொலை செய்துகொண்டதை கேள்விப்பட்டிருப்போமா? ஆனால் ஸ்காட்லாந்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட நாய்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றன. அதில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்திருக்கின்றன. அதுவும் அந்த ஒரே பாலத்தில். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்த பாலத்தின் ஒரு குறிப்பிட்ட வளைவில் மட்டும் குதிக்கின்றன. எந்த அறிவியலாளர்களுக்கும் இன்னமும் புரியாமல் இருக்கும் அந்த மர்மம் என்னவாக இருக்கும்?

ஸ்காட்லாந்து நாட்டின் டம்பர்டன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலத்தின் பெயர் ஓவர் டவ்ன் பாலம். இந்த பாலத்தை யாராவது விவரம் தெரியாதவர்கள் கடக்கும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் நாய்கள் ஜாக்கிரதை, அதாவது “ அபாயம், நாய்களை இந்த பாலத்தில் இருந்து விலக்கிவையுங்கள்” என்று எச்சரிக்கை விடுக்கும் வாசகம் பொருந்திய பலகையை பார்த்தால் குழப்பமடைய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் அந்த நபர் அவரது வளர்ப்பு நாயை அந்த பாலத்தை கடந்து வாக்கிங் கூட்டிச் செல்லும்போது அந்த பலகை எதற்கு வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிடும். இந்த பாலத்தை தாண்டிச் செல்லும் நாய்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வளைவு வரும்போது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கின்றன. இதுவரை பல நாய்கள் இந்த பாலத்தில் இருந்து குதித்து இறந்திருக்கின்றன.

இந்த பாலத்தில் பேய் இருப்பதாகவும் அந்த பேய்தான் நாய்களை தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் பல கதைகள் உலா வருகின்றன. இந்த பாலத்தை கட்டியவர் ஜான் காம்பெல் என்பவர். 1891 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கும் அவரது தோட்டத்திற்கும் இடையே ஒரு பாலத்தை கட்ட திட்டமிட்டார் ஓவர்வென். அதன் படி 1895 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது.

அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் அவருக்குப் பிறந்த குழந்தை சாத்தான் குழந்தை என்று முடிவெடுத்து அந்த பாலத்தில் இருந்து தூக்கி எறிந்து அந்த குழந்தையை கொலை செய்தார். அந்த குழந்தைதான் ஆவியாக வந்து நாய்களை தற்கொலைக்கு தூண்டுவதாக ஒரு கதை உண்டு. இந்த சம்பவம் நடந்தது 1994 ஆம் ஆண்டு. ஆனால் 1994 ஆம் ஆண்டிற்கு முன்பே பல நாய்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன. ஆதலால் அந்த கதையும் பொய்த்துப்போனது.

சில அறிவியலாளர்கள் “அந்த பாலத்துக்கு கீழே மிங்க் வகையைச் சேர்ந்த எலிகள் அதிகளவு வசிக்கின்றன. அந்த எலிகளின் வாசனை அந்த நாய்களை கவர்வதால் அந்த எலிகளை பிடிக்கும் முயற்சியில் பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிடுகிறது” என்று கூறினார்கள். ஆனால் ஸ்காட்லாந்தில் பல இடங்களில் மிங்க் வகையான எலிகள் வசிக்கின்றன. அங்கெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்று அறிவியலாளர்களின் லாஜிக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இவ்வாறு இன்றும் அவிழ்க்கப்படாத முடிச்சாக இந்த மர்மம் நீடித்து வருகிறது. நாய்களை அந்த பாலத்தை கடந்து வாக்கிங்க் கூப்பிட்டுச் செல்லும்போது அந்த குறிப்பிட்ட வளைவு வரும்போது மட்டும் நாய்கள் மிரள்கின்றன என்றும் பல நாய்கள் பயத்திலேயே சாப்பிடாமல் இறந்துவிடுகின்றன என்றும் கூறுகிறார்கள். உலகில் விவரிக்க முடியாத பல மர்மங்களில் இந்த நாய்களின் தற்கொலை பாலம் விழிபிதுங்க வைக்கிறது.

Arun

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

54 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

57 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

1 மணத்தியாலம் ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago