#image_title
இசைஞானி இளையராஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. சிறுவயதில் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் இருந்து சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்ற ஆசையோடு சகோதரர்களான கங்கை அமரன், இளையராஜா, பாஸ்கர் ஆகிய மூன்று பேரும் சென்னைக்கு வந்துள்ளனர்.
முதலில் நாடகங்களுக்கு மூவரும் இசை அமைத்துள்ளனர். அப்போது பாடகியான கமலா என்பவர் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரின் இசை திறமைகளை பார்த்து வியந்தார். அவர்களிடம் நீங்கள் மேற்கத்திய இசையை வாசிப்பீர்களா என கேட்டுள்ளார். மூவரும் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு தெரிந்த யாரையாவது வைத்து கற்றுக் கொடுத்தால் எளிதில் தெரிந்து கொள்வோம் என கூறியுள்ளனர்.
இதனால் கமலா பன்முக இசை கலைஞரான தன்ராஜ் என்பவரிடம் மூன்று பேரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் இளையராஜா உட்பட மூன்று பேருக்கும் மேற்கத்திய இசை மற்றும் கன்னட இசையை கற்றுக் கொடுத்தார். மூன்று பேரும் நன்றாக திறமைகளை வளர்த்துக் கொண்டனர். இதனை அடுத்து ஒரு முறை ஜி.கே வெங்கடேசனின் படத்திற்கு இசையமைக்க தன்ராஜ் சென்றுள்ளார். அவரிடம் இளையராஜாவை அசிஸ்டெண்டாக சேர்த்துக் கொள்ளுங்கள் என தன்ராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறியபடி ஜி.கே வெங்கடேசன் இளையராஜாவை அசிஸ்டெண்டாக சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு ஜி.கே வெங்கடேசனின் உதவியாளராக பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் இணைந்து இளையராஜா பணியாற்றியுள்ளார். அடுத்ததாக அந்த படத்தை அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜா இசையமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்ப காலகட்டத்தில் பாடகியான கமலாவின் பங்கு இசைஞானியின் வாழ்க்கையை மாற்றி உள்ளது.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…