ஈரான் கேட்ட அந்த ஒரு விஷயம்… அதிர்ந்து போன அமெரிக்கா…! எடுபடுமா 15 அம்ச திட்டம்…? மத்திய கிழக்கில் மாபெரும் மாற்றம்..!!!

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தை பாகிஸ்தான் தூதர்கள் வழியாக ஈரானிடம் சமர்ப்பித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி, ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும், ஏவுகணை சோதனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பிரதிபலனாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கவும், ஆக்கப்பூர்வமான அணுசக்தித் தேவைகளுக்கு உதவவும் அமெரிக்கா முன்வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் எதையும் ஈரான் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்பதோடு, அமெரிக்கா “தன்னுடன் தானே பேசிக்கொள்கிறது” என ஈரான் ராணுவம் கிண்டல் செய்துள்ளது.

மேலும் மறுபுறம், ஈரான் தரப்பிலிருந்தும் 10 முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூட வேண்டும், அனைத்துத் தடைகளையும் முழுமையாக நீக்க வேண்டும் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கைகளாக உள்ளன.

இந்நிலையில் இரு நாடுகளும் தத்தமது நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதால், அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு சிக்கலான நிலையில் உள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது கூடுதல் படைகளைக் குவித்து வருவது இப்பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Rajeshwari

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago