தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் தெரியுமா?…

By Samrin on வைகாசி 9, 2023

Spread the love

ஒரு திரைப்படத்திற்கு  நடிகர், நடிகை எவ்வளவு முக்கியமோ அதேபோன்றுதான் அப்படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் அந்த படத்தில்இவர்களுக்கு  பெரிய பங்கு உள்ளது. அவ்வாறு  நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர்களின் முதல் படத்தை பற்றி காண்போம்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் நாகேஷ். இவர் 1959 ஆம் ஆண்டு வெளியான ‘தாமரை குளம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

   

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கவுண்டமணி . 1964 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்தின் மூலமாகதமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் செந்தில். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கோவில் இரு தீபங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மறைந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் விவேக். இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர்களின்  ஒருவர் நடிகர் சந்தானம். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பேசாத கண்ணும் பேசுமே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர்கள் ஒருவர் நடிகர் வடிவேலு இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலமாக தமிழ்திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் ஒருவராக  வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ திரைப்படத்தில்  நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் ஒருவர் நடிகர் சதீஷ். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்படம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகர் மொட்டை ராஜேந்திரன். இவர்  2009 ஆம் ஆண்டு வெளியான ‘நான் கடவுள்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவை வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகர் ஜனகராஜ் .இவர் 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பிரபல  நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சூரி .இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

முன்னால்  நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘பிதாமகன்’ படத்தில் நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.