Categories: சினிமா

நடிகர் பார்த்திபன் படத்துக்கு இசையமைத்து 5 பாட்டையும் தானே பாடிய SPB… அட.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…

Spread the love

தென்னிந்திய சினிமாவிலேயே மிகச் சிறப்பான தனித்துவமான குரல் வளத்தை கொண்டவர் தான் பின்னணி பாடகர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. ஒரு பிரபலமான பின்னணி பாடகராக திகழ்ந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இளம் வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த SPB சிறுவயதிலேயே பாடுவதற்கு கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளையும் வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார்.

சென்னையில் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் போது இசையில் அதிக நாட்டம் கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் பல பாடல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசை பெற்றார். ஆரம்பத்தில் மெல்லிசை குழு ஒன்றை நடத்தி வந்தார் SPB. இக்குழுவில் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோர் பங்கு பெற்றனர். இதன் மூலம் சினிமாவில் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

1966 ஆம் ஆண்டு தன் முதல் பாடலை சினிமாவுக்காக பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் 1966 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம். இவரை “பாடும் நிலா” என்றும் மக்கள் அழைத்தானர்.

சிறந்த ஆண் பின்னணி பாடகற்கான ஆறு தேசிய திரைப்பட விருதுகளையும், ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும் பல தமிழ்நாடு அரசு விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும், ஆறு தென்னிந்திய விருதுகளையும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக கின்னஸ் உலக சாதனையை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார் SPB . இவ்வாறு புகழ்பெற்ற எஸ் பி பாலசுப்ரமணியத்தை பலருக்கு பின்னணி பாடவராக தான் தெரியும். ஆனால் நடிகர் பார்த்திபன் நடித்த ஒரு படத்திற்கு இவர் பின்னணி இசை அமைத்து அப்பிடத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

1991 ஆம் ஆண்டு பார்த்திபன் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் “தையல்காரன்”. இந்த திரைப்படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு தான் எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் ஐந்து பாடலுக்கும் அவர் தன் குரலில் பாடி இருக்கிறார். இந்த விஷயம் இதுவரை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். SPB பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் இசையமைத்தும் இருக்கிறார் என்பது இந்த படம் சான்றாக இருக்கிறது.

admin

Recent Posts

BREAKING: சுங்கச்சாவடியில் திடீரென சரணடைந்த 7 பேர்… சேலம் ரவுடி ஜங்ஷன் டேவிட்டின் கதையை முடித்த மினிட்-டு-மினிட் ஷாக்…. அதிரடி திருப்பம்….!

சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளான 7 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில்…

1 minute ago

“அடுத்த ரீல்ஸ் எப்போது வரும் ஸ்டாலின் அங்கிள்?”…. சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் காட்டி சகட்டுமேனிக்கு அடித்த தவெக….!

சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…

7 minutes ago

BREAKING: தனுஷ் தனிக்கட்சி தொடங்குவது உறுதி….. வெடியைக் கொளுத்திய K.T. ராஜேந்திர பாலாஜி…. அடுத்த பரபரப்பு…..!

திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…

14 minutes ago

ரூ.634 கோடி நியமன வழக்கு…. அடுத்தடுத்து ஆப்பு…. நேருவைத் தொடர்ந்து சகோதரர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…

18 minutes ago

“ஒரே ஃபைல்… ரூ.400 கோடி ஊழல் போலீஸ் கையில்”…. ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு…. அன்பில் மகேஷ் கைதுக்குப் பின்னால் உள்ள பகீர் பின்னணி…. உடைத்த நிர்மல்குமார்…..!

தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பள்ளிப் பாடநூல் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

38 minutes ago

“பணம், நகை எதுவும் வேண்டாம்”…. ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் கேட்ட அந்த ஒரு கண்டிஷன்… மிரண்டு போனா பெண் வீட்டார்….!

ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் போன்ற வழக்கமான வரதட்சணைகளை முற்றிலும் மறுத்து, சமூகத்திற்குப்…

43 minutes ago