ஐஸ்வர்யா ராஜேஷ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சின்னத்திரை சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கப் பெற்று இன்று பிரபலமாக நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
2012 ஆம் ஆண்டு “அட்டகத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2015 ஆம் ஆண்டு “காக்கா முட்டை” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது மற்றும் இவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
தொடர்ந்து தர்மதுரை, குற்றமே தண்டனை, சாமி 2, செக்கச் சிவந்த வானம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பலமொழிகளில் பிஸியான நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையும் அத்தையும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் 50 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர். இவருடைய தாத்தா அமர்நாத்தும் தெலுங்கு நடிகர் ஆவார். இவரது அத்தை ஸ்ரீ லட்சுமி தெலுங்கு சினிமாவில் 500 படங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகையாக நடித்து புகழ்பெற்றவர். இத்தனை பேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தில் சினிமாவில் நடித்து பிரபலமானவர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…