#image_title
இந்தியா ஒரு சொர்க்க பூமி. புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த இடம் ஆகும். ஆன்மீகத்திற்கு பெயர் பெற்றது உலகிலேயே இந்தியா தான். இங்கு பழங்காலம் தொட்டு 14 15 நூற்றாண்டு முதல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக்கலைக்கு பேர் போன அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் இருக்கும் கோவில்கள் அதிகம். இதுவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியாவிற்கு ஈர்க்கும் விஷயமாகும். அப்படிப்பட்ட இந்தியாவில் ஐந்து பணக்கார கோயில்கள் என்னென்ன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.
1. திருப்பதி ஏழுமலையான் கோவில்
இந்தியாவின் பணக்கார கோவில் என்று எடுத்துக் கொண்டாலே நம் நினைவில் உடனே வருவது திருப்பது ஏழுமலையான் கோவில்தான். தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு ஏழுமலையானை தரிசிக்க வருகிறார்கள். ஏழுமலையானை தரிசிப்பது மட்டுமல்லாமல் தங்கம் வெள்ளி வைரம் என உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகிறார்கள். ஏழுமலையான் கோயில் சார்பாக கிட்டத்தட்ட 14,000 கோடி வங்கிகளில் நிரந்தரவைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
2. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்
கேரளாவில் மிக செல்வ செழிப்பு வாய்ந்த கோவில்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பத்மநாபசாமி கோவில். இந்த கோயிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கோயிலுக்கு சொந்தமான தங்க விக்கிரகங்கள் வைரங்கள் வைடூரியங்கள் இருப்பதாகவும் புதையலாக 1300 டன் தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கோயிலின் நிராகர மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
3. மும்பை சித்தி விநாயகர் கோவில்
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று சித்தி விநாயகர் கோவில் மும்பைக்கு செல்லும் யாவரும் இந்த கோயிலை சென்று தரிசிக்காமல் வர மாட்டார்கள். அவ்வளவு பிரபலம் வாய்ந்தது இந்த விநாயகர் கோவில். இந்த கோவிலில் 35 கிலோ தங்கம் கோயில் 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
4. பொற்கோவில்
பொற்கோவில் எனப்படும் கோல்டன் டெம்பில் பஞ்சாப் அம்ரிட்சாரில் அமைந்திருக்கிறது. பொற்கோவில் சீக்கிய மக்களின் முக்கிய கலாச்சார மையமாக திகழ்கிறது. இந்தக் கோவிலுக்கு ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன.
5. வைஷ்ணவி தேவி கோவில்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த கோவில் வைஷ்ணவி தேவி கோவில். இக்கோயிலின் பிரதான தெய்வம் மாதா ராணி. இது மலைக்கு மேலே 5200 அடிகள் உயரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று காணிக்கைகளை செலுத்துகின்றனர். இந்த கோயிலின் சொத்து மதிப்பு 500 கோடி ஆகும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…