சன் மியூசிக் தொகுப்பாளினி நிஷா இப்ப எப்படி இருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு?… இவ்வளவு குண்டா?… நீங்களே பாருங்க….

By Begam on கார்த்திகை 19, 2022

Spread the love

சன் மியூசிக் தொகுப்பாளினி நிஷாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தொகுப்பாளினி நிஷா.

   

   

இவர் சன் மியூசிக் மட்டும் இன்றி இசையருவி தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராக வலம் வந்தார். இவருடைய குரலுக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதை தொடர்ந்து அவர் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பிரபலமானது இசையருவி நிகழ்ச்சி மூலம் தான். இவர் இசையருவியில் தொகுப்பாளினியாக இருந்த பொழுது இசையருவியில் ஒளிபரப்பான வேறொரு  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் முரளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

முரளி தொகுப்பாளர் மட்டும் இல்லாமல் நடிகர் ஆவார். இவர் ஒரு சில சீரியலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் ஃபோரஸ் என்ற பெயரில் பொட்டீக் ஒன்றை நடத்தி வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் தனது மகள் நன்றாக வளர்ந்த பின்பு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதாக பேட்டி ஒன்றில் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்பொழுது அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் குண்டாக காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ‘தொகுப்பாளினி நிஷாவா இவர்? இவ்வளவு குண்டு ஆயிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படம் இதோ…