Categories: CINEMA

இண்டஸ்ட்ரி ஹிட் ‘லியோ’ … ஜெயிலர் , ஜவான் எல்லாம் ஓரம் போ… தெறிக்க விடும் தளபதியின் ‘லியோ’ 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர்  19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம்,  தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்துள்ளது.

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற சிக்கல் நிலவி வந்தது. ஆனாலும் அனைத்து பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரிலீசான முதல் நாளே  உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்ததன் மூலமாக தளபதி என்றும் மாஸ் தளபதி தான் என்பதை நிரூபித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் லியோ வெளியாகி  4 நாட்களை நிறைவு செய்த நிலையில் சுமார் 410 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டு வந்தது. தற்பொழுது 5 வது நாளான நேற்று மட்டும் 70 கோடி வசூல் செய்துள்ளாதாம். இதன்படி பார்த்தால் தற்பொழுது வரை 480 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதியின்  வசூல் சாதனையில் லியோ கண்டிப்பாக ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.

இதோடு மட்டுமில்லாமல் லியோ சீக்கிரமாகவே 1000 கோடி வசூலை எட்டும் என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் புல்லாகவே காணப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் லியோ 1000 கோடியை எட்டுமா? என்பதை.

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

10 மணி நேரங்கள் ago