இன்று காந்தி ஜெயந்தி… மகாத்மா காந்தி எப்படி “இந்திய தேசத்தின் தந்தை” ஆனார் தெரியுமா…?

Spread the love

மகாத்மா காந்தி இந்திய தேசத்தின் தந்தை என்பது நாம் எல்லோரும் அறிவோம். இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அகிம்சை வழியை தேர்ந்தெடுத்து ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டை மீட்டெடுத்து தன் உயிரையும் நீத்தவர் மகாத்மா காந்தி. இவருக்கு இந்திய தேசத்தின் தந்தை என்ற பெயர் எப்படி கிடைத்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தான் மகாத்மா காந்தியை தேசத்தின் தந்தை என்று அழைத்த முதல் நபர் ஆவார். அதற்குப் பிறகுதான் சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றம் காந்திஜியை இந்திய தேசத்தின் தந்தையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

பொதுவாக ஒரு சுதந்திர நாட்டின் முதல் ஜனாதிபதிக்கு தான் தேசத்தின் தந்தை என்ற பட்டம் வழங்கப்படும். மகாத்மா காந்தியோ அத்தகைய பதவியை வகிக்கவில்லை. அதற்காக அவர் ஏங்கவும் இல்லை. இந்தியாவை சுதந்திர நாடாக கட்டி எழுப்பியதில் காந்தியஜியின் பங்கு கண்டு சுபாஷ் சந்திர போஸ் அத்தகைய பெயரை அவருக்கு வழங்கினார்.

ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சியில் அனைவரையும் ஒற்றுமையாக ஒன்று திரட்டி இந்தியர்களின் மத்தியில் தேசியவாத உணர்வை ஊட்டி அகிம்சை வழியில் போராட செய்து இந்தியா சுதந்திரம் அடைய முக்கிய பங்கு வகித்தவர் மகாத்மா காந்தி. எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாத எளிமையான வாழ்க்கை முறையை கொண்டிருந்தவர் மகாத்மா காந்தி. இதுவே மக்களுடன் அவர் நெருங்கி பழகுவதற்கு வழி வகுத்தது.

உயர் குடி குடும்பத்தில் பிறந்து நகர்ப்புற வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாலும் மகாத்மா காந்திஜி கதர் உடுப்பையே அணிந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு கதர் வேட்டி கதர் துண்டு இதுதான் இவர் உடையாக ஆகிப்போனது. மற்ற அரசியல் தலைவர்கள் போல் ஆங்கிலத்தில் பேசாமல் காந்திஜி எளிமையான இந்தி அல்லது குஜராத்தில் பேசினார். காந்திஜி ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல அனைத்து பாமர மக்களாலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் பேசும் திறமையான தொடர்பாளர் ஆவார்.

காந்திஜி மக்களிடையே தேசிய உணர்வை பரப்புவதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது சத்தியாகிரக இயக்கத்தில் பெண்களை அவர் முன்னிலைப்படுத்தி ஈடுபடுத்தியது தான். நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டனர். வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்தனர். தனிநபர் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றிலும் கலந்து கொண்டு மகாத்மா காந்திக்கு பெண்கள் முழு ஆதரவு அளித்தனர். தேசிய சுதந்திரப் போராட்டத்தில் இறங்குவதற்கு முன் மகாத்மா காந்திஜி ஒரு வருடம் முழுவதுமாக நாடு முழுவதும் பயணம் செய்து பொதுமக்களையும் தலைவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொண்டார்.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்த மகாத்மா காந்திஜி மற்ற அரசியல் தலைவர்கள் போல் இல்லாமல் இவரது வழி தனி வழியாகவே இருந்தது. இறுதியில் தன்னை சுட்டு படுகொலை செய்த வெறியனை கூட மன்னித்து தனது உயிரை விட்டார் காந்திஜி. அதனால் இவருக்கு இந்திய தேசத்தின் தந்தை என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவரை தவிர வேறு ஒருவருக்கும் இந்த பட்டம் பொருந்தாது என்பது மிகை அல்ல.

admin

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

2 minutes ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

5 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

10 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

15 minutes ago