இந்திய குடிமக்களாக பிறந்த ஒவ்வொருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒரு அரசு சார்ந்த ஆவணங்கள் இல்லை படிப்பு அல்லது வேலை எதுவாக இருந்தாலும் இந்த ஆதார் அட்டை என்பது கட்டாயம் தேவை. முதியோர் உதவித்தொகை, கேஸ் சிலிண்டர், கணக்கு தொடங்குவது, அரசின் சமூக நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும்.
சிலர் ஊர் விட்டு ஊர் செல்வார்கள் அல்லது திருமணமான பெண்கள் தங்களது முகவரியை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஆதார் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆன்லைனில் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் சம்பந்தமான சேவைகளை எளிதாக பெற UIDAI என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் ஆதார் மித்ரா என்ற AI சாட் போட்டை அறிமுகப்படுத்தியது. இந்த சாட் போட் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது.
UIDAI இன் அதிகாரபூர்வ வலைத்தளம் uidai.gov. in உள்ளே இந்த சாட் போட் மூலம் பல்வேறு ஆதார் தொடர்பான சேவைகளை பெறலாம். ஆதார் மித்ரா சாட் போட்டை பயன்படுத்தி உங்கள் PVC ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஆதார் மித்ராவை வைத்து E-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இந்த சாட்போட் வழியாக உங்கள் தொலைந்த ஆதார் அட்டை குறித்தும் புகார் செய்யலாம். இது மட்டுமல்லாமல் ஆதார் மித்ரா சாட் போட் உங்கள் ஆதார் அட்டையின் பதிவு அல்லது புதுப்பிப்பு ஆகியவற்றை வழங்கும். ஆதார் சாட் போட்டை பயன்படுத்திக் கொள்ள தனி நபர் தங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தை கண்டறிய உதவுகிறது.
அதே நேரத்தில் இந்த ஆதார் மித்ரா சாட்போட் மூலம் ஆதார் தகவல்களை புதுப்பிக்க முடியுமா என்றால் செய்ய முடியாது. பயனர்கள் தங்கள் முகவரி, மொபைல் எண், மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் போன்ற தகவல்களை myAadhaar போர்ட்டலில் இலவசமாக புதுப்பிக்கலாம். அதில் தேவையான ஆவணங்களை பதிவேற்றலாம். இந்த ஆதாரம் பித்ரா சாட்போட்டை பயன்படுத்தி குறைகள் குறித்து புகார் அளிக்கலாம். உங்களது ஸ்டார் ரேட்டிங் மதிப்புகளை உள்ளிடலாம். உங்களது ஆதார் நிலையான பதிவு ஐடி, சேவை கோரிக்கை எண், புதுப்பிப்பு கோரிக்கை எண் ஆகியவற்றை இதில் பதிவிட்டு சரி பார்க்கவும் செய்து கொள்ளலாம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…