“எங்களுக்கே போன் வந்துச்சு”…. தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் பகீர் கிளப்பும் குதிரை பேர ரகசியம்…. அம்பலமான திமுக – அதிமுகவின் கூட்டு சதி….!

Spread the love

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, திமுகவும் அதிமுகவும் தவெக ஆட்சியை கவிழ்க்க ரகசியக் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் மன்றத்தில் தவெகவின் வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத இந்த இரு கட்சிகளும், தற்பொழுது குதிரை பேர அரசியலில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் அரசியலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள தவெகவை வீழ்த்த, பண பலத்தை பிரயோகிக்க முயற்சிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.

தமக்கு எதிராக நடத்தப்பட்ட பேர முயற்சி குறித்துப் பேசிய எம்.எல்.ஏ. முஸ்தபா, தவெக அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்கக் கோரி ஆரம்பத் தொகையாக 15 கோடியும், தீர்மானத்திற்குப் பின் மீதி 15 கோடியும் என மொத்தம் 30 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மதுரையைச் சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தம்மைத் தொடர்புகொண்டு இந்த பேரம் பேசியதாகவும், இது குறித்து கட்சியின் உயர்மட்டத் தலைமையிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாட்சியை சீர்குலைக்க நினைக்கும் இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களுக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள் என்று முஸ்தபா திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இந்த குதிரை பேரக் கூட்டுச் சதியில் பின்னணியில் செயல்படுபவர்கள் யார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும், அதனைத் தமிழக மக்கள் தகுந்த முறையில் பார்த்துக்கொள்வார்கள் என்றும் எச்சரித்துள்ளார். தவெக எம்.எல்.ஏ.-வின் இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago