மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தவெக எளிதாக வெல்லும் என்றும், திமுக தனது டெபாசிட்டைத் தக்கவைக்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மதுராந்தகத்தில் 53,463 வாக்குகளையும், தாராபுரத்தில் 57,370 வாக்குகளையும் பெற்று தனது பலமான வாக்கு வங்கியை அக்கட்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.
இந்த வெற்றிகரமான நகர்வுக்குப் பின்னால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் துல்லியமான வியூகமும் நேரடித் தலையீடும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டிய அவர், வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பொறுப்புகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். சில சீனியர் அமைச்சர்கள் மட்டுமே களப்பணியில் தீவிரம் காட்டியதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கேற்ப மாற்றுத் திட்டங்களை அவர் உடனடியாக வகுத்தார்.
சீனியர்களை மட்டுமே முழுமையாக நம்பியிராமல், இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என சுமார் 750 பேரைத் தேர்தல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் இறக்கிவிட்டார். ‘ஒரு பூத்துக்கு 10 இளைஞர்கள்’ என்ற அடிப்படையில் இவர்கள் வகுத்த வியூகம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் கட்சியைத் தீவிரமாகச் கொண்டு சேர்த்தது. சீனியர்களின் அனுபவமும் இளைஞர்களின் அதிரடி உழைப்பும் இணைந்ததே தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்தச் சிறப்பான தேர்தல் செயல்பாடு திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளைஞரணியை மேலும் பலப்படுத்தவும் மறுசீரமைக்கவும் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். தேர்தல் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு எந்தளவுக்கு வெற்றியைத் தரும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு சான்றாக மாறியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…