“திமுக VS பாஜக”…. “18 தொகுதிகளில் நேருக்கு நேர்!”… திமுக அமைச்சர்களைத் தூக்க பாஜக போட்ட மெகா பிளான்.. தமிழகத் தேர்தலின் ‘கிளைமாக்ஸ்’ மோதல் இதோ…!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தனது 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 18 பெண்கள், 29 வழக்கறிஞர்கள் மற்றும் 15 மருத்துவர்கள் எனப் படித்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வாக்காளர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 120 தொகுதிகளில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக நேருக்கு நேர் மோதுகின்றன. அதே சமயம், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 18 தொகுதிகளில் திமுக மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.ஆவடி, மயிலாப்பூர், திருவண்ணாமலை, ராசிபுரம் (தனி), கோவை வடக்கு, அவிநாசி (தனி), திருப்பூர் தெற்கு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை, ராமநாதபுரம், திருச்செந்தூர், வாசுதேவநல்லூ, ராதாபுரம், நாகர்கோயில் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் ‘உதயசூரியன்’ மற்றும் ‘தாமரை’ சின்னங்கள் நேரடியாக மோதுவது தேர்தல் களத்தை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, 5 முக்கியத் தொகுதிகளில் திமுகவின் மூத்த அமைச்சர்களை எதிர்த்து பாஜக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு, திருப்பத்தூரில் அமைச்சர் பெரிய கருப்பன், ஆவடியில் அமைச்சர் நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை பாஜக வேட்பாளர்கள் நேரடியாக எதிர்கொள்கின்றனர். அமைச்சர்களின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதிகளில் பாஜக கொடுக்கும் சவால் இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அமைச்சர்களுடனான நேரடி மோதல் மற்றும் திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான மல்லுக்கட்டு என 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago