திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களை 77-லிருந்து 110-ஆக உயர்த்துவதற்கு அக்கட்சியின் செயற்குழுவில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்படும் மாவட்டங்களில் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளை இணைக்கலாம் என்பது குறித்து கட்சியின் மறுசீரமைப்பு குழு தயார் செய்த விரிவான அறிக்கை, ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மறுசீரமைப்பு மூலம் நிர்வாகச் சீர்திருத்தங்கள் வேகமெடுப்பதுடன், தொண்டர்களின் களப்பணியும் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் புதிய விதிகளின்படி, சராசரியாக 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட உள்ளனர். எனினும், சென்னை, திருச்சி, சேலம், விருதுநகர், நெல்லை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் அரியலூர் ஆகிய 14 மாவட்டங்களின் புவியியல் மற்றும் மக்கள் தொகை சூழலைக் கருத்தில் கொண்டு, அவை தலா 3 தொகுதிகளை உள்ளடக்கிய அமைப்பு ரீதியான மாவட்டங்களாகப் பிரிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள் அனைத்தும் தலா 2 தொகுதிகளுடன் புதிய மாவட்டங்களாக மறுவரையறை செய்யப்பட உள்ளன.
நிர்வாகப் பொறுப்புகளில் சுழற்சி முறையைக் கொண்டுவரும் வகையில், மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதோடு, ஒரு நபர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே இப்பதவியில் நீடிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் காரணமாக சுமார் 13 முன்னாள் அமைச்சர்கள் தங்களது மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை இழக்க நேரிடும். எனினும், சீனியர்களை முழுமையாக ஓரம் கட்டாமல் அவர்களுக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்புகளை வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், சுமார் 50 புதிய முகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதால், இளைஞர்கள் மற்றும் அடுத்தகட்ட தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.
முன்னதாக, தேர்தல் மூலமாகவே கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் 110 மாவட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, புதிதாக உருவாகும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகங்களைப் பிரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, உள்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்குச் செல்லவுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…