“முதலமைச்சரின் அதிகாரத்தை ஆளுநருக்கு தூக்கிக் கொடுப்பதா…?” தவெக அரசை கிழித்துத் தொங்கவிட்ட திமுக MP …! தமிழக அரசியலில் பரபரப்பு…!

Spread the love

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-லிருந்து 5-ஆக உயர்த்தப் போவதாகவும், அதில் யுஜிசி உறுப்பினரைச் சேர்க்க உள்ளதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார். இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், தவெக அரசு மத்திய பாஜக அரசிடம் மண்டியிட்டு, மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக விட்டுக்கொடுக்கிறது என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் தாரை வார்ப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார்.

பல்கலைக்கழகங்களைக் கட்டுவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள பணியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பி.வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். 2018-ல் கொண்டுவரப்பட்ட யுஜிசி விதி 7.3-க்கு எதிராகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராகவும் முந்தைய திமுக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள், உச்ச நீதிமன்றம் மூலம் சட்டமாக்கப்பட்டு ஆளுநரின் அதிகாரம் வரைமுறைப்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தவெக அரசு ஆளுநரின் அழுத்தத்திற்குப் பணிந்து, தேடுதல் குழுவில் யுஜிசி மற்றும் ஆளுநரின் பரிந்துரைக்கு கூடுதல் இடங்களை அளிப்பது கடந்த காலப் போராட்டங்களை வீணடிக்கும் செயல் என்று பி.வில்சன் எச்சரித்துள்ளார். தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் மாநில மக்களுக்கு வழங்கிய உரிமையையும், இதுவரை போராடிக் காப்பாற்றிய மாநில சுயாட்சியையும் எக்காலத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், தேடுதல் குழுவில் யுஜிசி நாமினியை இணைக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Swetha

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

9 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

13 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

39 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

59 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago