தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நெல்லை மாவட்டத்தில் பாஜக பூத் கமிட்டி மாநாடு ஆகஸ்ட் 22, 2025 ஆம் நாள் நடந்தது. மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக கட்சியை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது எண்ணமே அவருடைய மகன் உதயநிதியை முதல்வர் ஆக்குவது தான். ஆனால் ஒரு பொழுதும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவே முடியாது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் சிறையில் இருந்தவர்கள் இருப்பினும் இதுவரை ஆட்சியில் இருக்கின்றன.
இதுப்போன்ற விமர்சனத்திற்கு திமுக அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக திமுக தொடர் வெற்றியை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சியும் திமுகவுக்கே என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் அது அவர்களது ஆசை மட்டுமே, மீண்டும் நாங்களே வென்று வருவோம் என்று நேரு பதில் அளித்துள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆ.ருக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே பெண்களின் ஆதரவு அதிகம் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களின் ஆதரவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தவெக மற்றும் திமுக க்கு போட்டி என்றுக் கூறிவருகிறார்கள், ஆனால் திமுகவுக்கு எந்த போட்டியும் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…