திமுகவினருக்கு போடப்பட்ட திடீர் “வாய்ப்பூட்டு”… ஸ்டாலின் கொடுக்கும் ‘வார்னிங்’…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

திமுக நிர்வாகிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி தொடர்பான முடிவுகளைக் கட்சித் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும், அதுவரை தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆட்கள் இல்லை என்றும், திமுக இல்லையென்றால் இந்தியா கூட்டணியே சிதைந்துவிடும் என்றும் அவர் பேசிய கருத்துகளுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்தகைய மோதல் போக்குகள் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், திமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என்று அகில இந்திய தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது திமுகவும் தனது நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. தேவையற்ற பொதுவெளி விவாதங்கள் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக்கூடும் என்பதால், கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ். பாரதி தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

பகீர்!.. அண்ணிக்கு வந்த விபரீத கோபம்!. நாத்தனாரை தடியால் அடித்து கொன்ற கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…

1 minute ago

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

4 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

8 minutes ago

“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…

10 minutes ago

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

11 minutes ago

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

15 minutes ago