நேற்று வந்தவர்களுக்கு சீட்டா..? அதிமுக ‘மாஜிக்களுக்கு’ சிவப்புக் கம்பளம்… திமுக ‘மாஜிக்கள்’ கடும் அப்செட்… தலைமைக்கு புதிய தலைவலி…!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட அமைச்சர்கள் பலரும் தங்கள் பகுதிகளில் செல்வாக்கு மிக்க மாற்றுக்கட்சிப் பிரமுகர்களை திமுகவில் இணைத்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பெயரைப் பெறுவதற்காக அமைச்சர்கள் காட்டும் இந்த வேகம், கட்சிக்கு ஒருபுறம் பலமாகத் தெரிந்தாலும், மறுபுறம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவிய முக்கியப் புள்ளிகளுக்கு, வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். “கட்சிக்காகக் கஷ்டப்பட்ட எங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நேற்று வந்தவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதா?” என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைச்சர்களின் இந்த அதிரடி நகர்வுகள், சில மாவட்டங்களில் உட்கட்சிப் பூசலாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இது தேர்தல் நேரத்தில் கட்சிக்கு எதிரொலிக்குமா அல்லது தலைமை இதனைச் சரிசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago