சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் SIR தொடர்பான நவம்பர் 2-இல் நடக்கும் தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க திமுக சார்பில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாதக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டால் இக்கூட்டத்தில் பங்கேற்போம் என்று தவெகவை சேர்ந்த அருண்ராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் பங்கேற்பாரா? இல்லையா? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…
யுரேமியா என்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சீனப் பெண், புற்றுநோய் நோயாளியின் சிறுநீரகத்தைப் பெறுவதற்காக அவரை மணந்தார். ஆனால்,…