சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி முப்பெரும் விழாவில், ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து அவர் ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடுமையான விவாதங்களை உருவாக்கியது. மேலும், மேடையில் அருகில் இருந்த எம்பி கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் இதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தவெகவினர் அடுத்தடுத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். குறிப்பாக, தவெக நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பேச்சு மற்றும் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சுதா தீனதயாளன் மேடையில் பேசியபோதே எம்பி கனிமொழி உடனடியாகக் கண்டித்ததாகவும், இதுகுறித்து திமுக மகளிர் அணி தரப்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இருப்பினும், அரசியல் களத்தில் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையே இந்தச் சம்பவம் கடும் வார்த்தைப் போரையும், பரஸ்பர விமரிசனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக ‘சிருதா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இந்தியில் ‘குரூக்’ மற்றும் தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’…
திரைப்பட நடிகர் கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக தனது 37 வது வயதில் காலமானார். மறைந்த பிரபல இசையமைப்பாளர்…
தமது மகளுக்கு அறுவைசிகிச்சை முடிந்த பிறகு வாய் வழியாக லேரிஞ்சியல் குழாய் செலுத்தப்படும் பதைபதைக்கும் காட்சியைக் கண்டு மனமுடைந்து தந்தை…
ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிருனால் பாண்டியா, கடற்கரையில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடியபோது ஷார்ட் பிட்ச் பந்தில் ஃபைன் லெக்…
வகுப்பறையில் மாணவன் ஒருவன் சக மாணவனை அதிவேகமாகக் கத்தியால் குத்திய விவகாரத்தில், தாக்குதலின் வேகம் காரணமாக ஆரம்பத்தில் தான் குத்தப்பட்டதே…
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின் போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…