“அந்த 68 பூத்களை மட்டும் தூக்குங்க”…. செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட போட்ட ஸ்கெட்ச்…. தவெக-வின் கோட்டையைத் தகர்க்கப் போகும் ஸ்டாலின்…..?

Spread the love

தமிழக அரசியலில் திருப்பங்களை ஏற்படுத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தற்போது அனைவரின் பார்வையும் இடைத்தேர்தல் களம் நோக்கித் திரும்பியுள்ளது. தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி அதிருப்தியால் சிலர் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனிடையே, வழக்கு நிலுவையில் உள்ள தொகுதிகளைத் தவிர்த்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொகுதியைக் கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது. முதல்வர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரசாரம் செய்யவுள்ள நிலையில், மறுபுறம் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த தேர்தலில் தவெக பிரித்த திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளை மீண்டும் தங்கள் பக்கம் திருப்புவதற்காக, திமுக தலைமை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது. இதன்படி, வெற்றியைத் தீர்மானிக்கும் குண்டடம் பகுதியில் உள்ள 68 வாக்குச்சாவடிகளை நேரடியாகக் கண்காணித்து வரும் அவர், மூலனூர் மற்றும் தாராபுரம் பகுதிகளை மையமாகக் கொண்டு வாக்குசேகரிப்பு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறார்.

மேலும், செந்தில் பாலாஜியுடன் இணைந்து திமுக முன்னாள் அமைச்சர்களான சக்கரபாணி, நேரு, அன்பில் மகேஷ் மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு வாக்குச்சாவடிகள் வாரியாகப் பொறுப்புகள் பிரித்தளிப்பப்பட்டு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் தவெக அரசுக்கு சவாலாக விளங்கும் இந்த இடைத்தேர்தல் முடிவு, வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல முக்கிய மாற்றங்களுக்கு வழியமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

1 மணத்தியாலம் ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

3 மணத்தியாலங்கள் ago