காலையிலேயே இபிஸ்-க்கு செம ஷாக்… 2026 தேர்தல் கூட்டணி… டிடிவி தினகரன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!

Spread the love

இந்த பாப்பா தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தேர்தல்களும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால் யார் வெற்றிவாகை சூடப் போகிறார்கள் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் விஜய்க்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தொடர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் விஜய்க்கு தொடர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. SIR ஐ தமிழகத்தை சேர்ந்த அலுவலர்கள்தான் மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் இது பற்றி அச்சம் வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் எங்களோடு சில கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கூட்டணி குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

2026 தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே தான் கடுமையான போட்டி இருக்கும். நாட்டின் நிலவரங்கள் மற்றும் சர்வே நிலவரங்களை பொறுத்து நடுநிலையாக நான் இதனை கூறுகின்றேன். இது யதார்த்தமான ஒன்றுதான். பழனிச்சாமி எங்களுக்கு துரோகம் செய்துள்ளார். அதனால் எங்களை சந்திக்க அவர் தயங்குவார். எங்களைப் பொறுத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் ஒருபோதும் செல்ல மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago