2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த கணக்கீடுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இந்த முறை தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகளின் வருகையால் தனது எண்ணிக்கையை 164 ஆகக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதுடன், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களையும் தக்கவைக்க அறிவாலயம் வியூகம் வகுத்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸிற்கு 25 இடங்களும், விசிக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்குத் தலா 7 இடங்களும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மதிமுக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 இடங்களும், மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்குத் தலா 4 இடங்களும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 3 இடங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய அமைப்புகளான கொமதேக உள்ளிட்டவை எஞ்சிய இடங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடும்.
இந்தத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தின் பலத்தை அதிகரிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு போன்ற தலைவர்கள் மீண்டும் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளது. ஒருவேளை பாமகவின் ஒரு பிரிவு கூட்டணிக்கு வரும்பட்சத்தில், அவர்களையும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் ஒரு தந்திரமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த உத்தேசப் பட்டியல் கூட்டணிக் கட்சிகளிடையே முழுமையான வரவேற்பைப் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியான விசிக, தேமுதிகவிற்கு இணையான இடங்களை ஏற்பதில் தயக்கம் காட்டலாம் என்றும், இடதுசாரி கட்சிகள் கூடுதல் இடங்களைக் கோர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவுகள் விரைவில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…
பாரிஸில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களின் போது, ரூ டி லா ரிபப்ளிக் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று பயங்கர…