“திமுக ஆட்சிதான் பெஸ்ட்”…. பிரச்சாரக் களத்தில் அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி… இப்படி ஒரு டுவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே….!

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டியால் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, அதிமுக மட்டுமன்றி திமுக ஆட்சியிலும் கூட நல்ல நிர்வாகம் வழங்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டு ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பாராட்டிப் பேசினார்.

ஒரு அரசாங்கம் திறம்படச் செயல்படுவதற்கு, பல ஆண்டுகள் நிர்வாக அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர்கள் அல்லது துறைச் செயலாளர்களையே ஆலோசகர்களாக நியமிப்பது மரபு என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகத்தின் நுணுக்கங்கள் தெரிந்திருக்கும் என்பதால், அவர்களது ஆலோசனையின் பேரில் மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாகச் சென்றடையும் என்றார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தமது ஆட்சிக்காலங்களில் இத்தகைய திறமையான அதிகாரிகளே நியமிக்கப்பட்டதால் தான் நல்லாட்சி வழங்க முடிந்ததாக எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்த அவர், அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்குப் பதிலாக ஜோதிடர்களையும் தேர்தல் வியூக வகுப்பாளர்களையும் அரசு ஆலோசகர்களாக நியமித்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். தேர்தல் வியூக வகுப்பாளர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி போன்றோரை நியமித்து நடத்தும் அரசால் மக்களுக்கு எப்படிச் சிறந்த திட்டங்களை வழங்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். நிர்வாக அனுபவம் இல்லாதவர்களை வைத்துக் கொண்டு அரசு நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்றும் அவர் சாடினார்.

மேலும், தவெக அரசு தொடர்பான பிற விவகாரங்களையும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தோல்வியடைந்த திரைப்படத் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பதைக் கேலி செய்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளரைத் டெல்லியில் தமிழகத்தின் பாலமாகச் செயல்பட நியமித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதே நிலை நீடித்தால் நாளையே தனது ‘மேக் அப் மேன்’ என்பவருக்கும் விஜய் அரசுப் பதவி வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனத் தீவிரமாக விமர்சித்தார்.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

6 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

14 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

20 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

36 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

43 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

55 minutes ago