“ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உங்களுக்கு 8,000 ரூபாய்”… பிரேமலதா அறிவித்த அந்த ‘மேஜிக்’ கூப்பன்… தமிழக அரசியலில் புயலை கிளப்பிய ‘இல்லத்தரசி கூப்பன்’…!

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மேற்கொண்ட அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பாணியிலேயே கம்பீரமாக உரையாற்றிய அவர், தனது பூர்வீகம் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை உடனான பிணைப்பைக் குறிப்பிட்டு மக்களிடம் உணர்வுப்பூர்வமாகப் பேசினார். குறிப்பாக, திமுக-தேமுதிக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்ட விதம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தேர்தல் களத்தின் மிக முக்கியமான அறிவிப்பாக ‘இல்லத்தரசி கூப்பன் திட்டம்’ பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தின்படி, வருமான வரி செலுத்தாத மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனைப் பயன்படுத்தி இல்லத்தரசிகள் தங்களுக்குத் தேவையான வாஷிங் மெஷின், டி.வி, ஃபிரிட்ஜ், மிக்சி அல்லது மின் அடுப்பு போன்ற மின்னணு சாதனங்களைப் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது பழைய பொருட்களுக்குப் பதிலாகப் புதிய பொருட்களை மாற்றிக்கொள்ளலாம்.

பெண்களை மையப்படுத்திய மற்றுமொரு முக்கிய அறிவிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்துவதாக பிரேமலதா உறுதியளித்தார். இதோடு மாணவர்களுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழான உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், சுய உதவிக் குழு பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ‘ஜாக்பாட்’ அறிவிப்புகள் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும் பிரேமலதா தனது உரையில் விரிவாகப் பேசினார். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 4,500 ரூபாய் வரை உயர்த்துவது, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பது மற்றும் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற திட்டங்களை அவர் முன்மொழிந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள 10 லட்சம் வீடுகள் மற்றும் 10 லட்சம் மருத்துவக் காப்பீடு திட்டங்களையும் சுட்டிக்காட்டிய அவர், கூட்டணி அரசில் இவை அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதிபடக் கூறினார்.

Nanthini

Recent Posts

ஐயோ கொடுமையே… பேருந்து சீட்டுத் தகராறில் நேர்ந்த பயங்கரம்… கம்பு, இரும்பு கம்பிகளுடன் புகுந்து… குடும்பத்தை ரத்தக் களறியாக்கிய கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ராஜமந்திரியைச் சேர்ந்த அப்பா ராவும் அவரது குடும்பத்தினரும் காலை நேரத்தில் ஆர்டிசி பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். அதே பேருந்தில்…

10 minutes ago

அடப்பாவிகளா… இது என்னடா லவ்வர்ஸ்க்கு வந்த சோதனை?… கணவன்-மனைவி போல் நடித்து… கேரளாவில் கஞ்சா விற்ற ஜோடி… போலீஸிடம் சிக்கியது எப்படி?…

கேரளாவில் புலம்பெயர்ந்தோர் குடியிருப்புப் பகுதிகளில் தம்பதியினர் போல் நடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரும்,…

19 minutes ago

திமுகவிற்கு அதிர்ச்சி… EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்… அரசியலில் பெரும் பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான வி. பண்டரிநாதன், திமுகவில் இருந்து விலகி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…

28 minutes ago

திரையுலகில் அதிர்ச்சி… இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்… சற்றுமுன் வெளியான காரணம்…!

இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. தேவாவின் உறவினரான கார்த்திக் சபேஷ்…

37 minutes ago

தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்?… சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப்…

43 minutes ago

“ரொம்ப கஷ்டப்பட்டேன்…” தயவுசெஞ்சி இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…! மனம் உருகி பேசிய நடிகர் அப்புக்குட்டி…!!

தேசிய விருது வென்ற பிரபல நடிகர் அப்புக்குட்டி, 'பண்டமாற்று' குறும்பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, திரைத்துறையில் உள்ள நடிகர்கள் யாரும்…

45 minutes ago