தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. இதனிடையே தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரமலதா விஜயகாந்த், அரசியல் சூழல் மிகவும் நிலையற்றதாக உள்ளது. எனது கட்சியின் இறுதி முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் கடலூர் மாநாட்டிற்கு முன்பு, அப்போது அல்லது அதற்குப்பிறகு கூட வரலாம்.
எங்களுடைய கூட்டணி முடிவு கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று கூறினோம். அது அப்படியே தான் இருக்கும். ஆனால் அதற்கு முன்பாக கூட அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிவித்துள்ளார். தங்களது முடிவை சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பதன் மூலமாக பேர அரசியலை தேமுதிக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வலுவான கூட்டணியில் இடம்பெறுவதையும் முக்கியமாக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தல் தேமுதிகவுக்கு வாழ்வா சாவா போராட்டம் போல மாறியுள்ளது.
விஜயகாந்த் இல்லாத நிலையில் சந்திக்கப் போகும் மிகப்பெரிய முதல் தேர்தல் என்பதாலும் பிரேமலதா நிதானம் காக்கின்றார். தேமுதிக கிட்டத்தட்ட எல்லா முக்கிய கட்சிகளுடனும் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் 20 தொகுதிகள் வரையும், அதிமுக கூட்டணியில் 23 முதல் 30 தொகுதிகள் வரையும், தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைந்தால் 50 தொகுதிகளுக்கும் மேல் தேமுதிக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் திமுக அதிகபட்சம் ஒன்பது தொகுதிகள் கூடுதலாக ஒரு ராஜ்ய சபா சீட்டையும் மட்டுமே வழங்க தயாராக உள்ளதால் பிரேமலதா விஜயகாந்த் முடிவு எடுக்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…