Categories: சினிமா

உஷாரான சூப்பர் ஸ்டார்.. LYCA நிறுவனத்துடன் போட்டி போடும் விநியோகஸ்தர்கள்..!!

Spread the love

த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டை திரைப்படம் பத்தாம் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார், லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. முக்கியமாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த படத்தை தயாரித்தது லைக்கா நிறுவனம். தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் லைக்கா நிறுவனத்திடம் நஷ்டமான பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அடுத்த படம் பண்ணும் போது நிச்சயமாக திருப்பி தருகிறோம் என லைகா நிறுவனம் சார்பில் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் விநியோகஸ்தர்கள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என கேட்க முடிவெடுத்ததாக தெரிகிறது. நாளை இது தொடர்பாக பிரஸ்மீட் வைக்கவும் வாய்ப்பு உள்ளதாம். இதுபோன்ற பிரச்சனைகள் வழக்கமாக படம் ரிலீஸ் ஆனதற்கு பின்பு தான் வரும். ஆனால் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே விநியோகஸ்தர்கள் பணத்தை கேட்க முடிவெடுத்ததாக தெரிகிறது.

முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்த ஒப்புக்கொண்ட போது என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் நீங்க பாத்துக்கணும். அப்புறம் படம் ஓடவில்லை என்று என் வீட்டு வாசல்ல வந்து நிக்கக்கூடாது என கறாராக சொல்லிவிட்டாராம். வேட்டையன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்கிறது. இதனால் நாளை இது தொடர்பான விவாதம் நடைபெறுமா என்பது தெரியவில்லை. இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.

admin

Recent Posts

“6 சிலிண்டர், ரூ.2,500 பணம் எல்லாம் ஓகே… 1 சவரன் தங்கம் எப்படி முடியும்?”… விஜய் வாக்குறுதிக்கு செக் வைத்த தராசு ஷ்யாம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில்,…

7 minutes ago

“சாப்பாடா? விஷமா?.. அரசுப் பள்ளி மதிய உணவில் மிதக்கும் சிலந்திகள்… அலறியடித்த பெற்றோர்கள்… பீகாரில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை”…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பன்மன்கி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், மதிய உணவில் சிலந்திகளும் பூச்சிகளும் கண்டறியப்பட்ட…

7 minutes ago

“அலறிய அக்கம்பக்கத்தினர்… நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டாய் சரிந்த 3 மாடி வீடு… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… கோட்டாவில் நேர்ந்த திகில் விபத்து”…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள குமானபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லபாரி பகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த மூன்று மாடி…

17 minutes ago

“விஜய்யுடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்?”… திமுகவை அதிரவைத்த மாணிக்கம் தாகூரின் ஒற்றை ட்வீட்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போதைய அரசியல் களத்தை அதிரவைத்திருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக…

19 minutes ago

“நள்ளிரவில் மாறிய தலையெழுத்து”… ஒரே ஒரு ஓட்டில் கோட்டையை விட்ட அமைச்சர்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?… வெளியான அதிர்ச்சி தகவல்…!

சிவகங்கை மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத தூணாகவும், அமைச்சராகவும் வலம் வந்த பெரியகருப்பன், திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக…

25 minutes ago

“கிளைமாக்ஸ் காட்சியை மிஞ்சிய பரபரப்பு!.. துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்களை போலீஸ் வளைத்துப் பிடித்தது எப்படி?… நெடுஞ்சாலையில் சினிமா பாணி சேஸிங்… வைரலாகும் திகில் வீடியோ”…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கானகர் மாவட்ட காவல்துறையினர், சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.…

27 minutes ago