“நீங்கள்தானே அனுமதி கொடுத்தீர்கள்?”… இந்திய கப்பலில் இருந்து ஈரானுக்கு போன கால்… நடுக்கடலில் நடந்தது என்ன?… அதிர வைக்கும் ஆடியோ….!

Spread the love

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) கடக்க முயன்ற இரண்டு இந்திய வணிகக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாக ஈரான் முதலில் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்ததால், அந்த முடிவை மாற்றிக்கொண்ட ஈரான் மீண்டும் அப்பகுதியை மூடுவதாக அறிவித்தது. இந்த இக்கட்டான சூழலில் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு ஈரான் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது இந்தியக் கப்பலில் இருந்து ஈரானிய கடற்படைக்கு விடுக்கப்பட்ட 30 வினாடிகள் கொண்ட அவசர கால ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘சன்மார் ஹெரால்ட்’ (Sunmar Herald) என்ற டேங்கர் கப்பலில் இருந்த மாலுமி ஒருவர், “செபாஹ் நேவி… நீங்கள்தானே அனுமதி கொடுத்தீர்கள்? உங்கள் பட்டியலில் எனது பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது, இப்போது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்? எங்களைத் திரும்பிப் போக அனுமதியுங்கள்” என்று உருக்கமாகப் பேசும் சத்தம் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு கப்பல் ‘ஜாக் அர்னவ்’ (Jag Arnav) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலின் ஜன்னல்கள் மற்றும் கண்டெய்னர்கள் சேதமடைந்தாலும், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தியக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தையும் கவலையையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகக் கப்பல்களின் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானுக்கான இந்தியத் தூதரை நேரில் அழைத்து இந்தச் சம்பவம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் உதவியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்தியா, தற்போதைய சூழல் கவலையளிப்பதாகக் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 13-க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்காமல் பாரசீக வளைகுடா பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதலைத் தணிக்க பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது என்பதால், அங்கு நிலவும் இத்தகைய மோதல் போக்கு சர்வதேச பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Nanthini

Recent Posts

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

12 minutes ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

12 minutes ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

16 minutes ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

20 minutes ago

“யார் அந்த SIR?”… மீண்டும் சூடுபிடிக்கும் அண்ணா பல்கலைகழக ஊழல் வழக்கு… ஸ்டாலினுக்கு அதிமுக விடுத்த ‘டெத் வாரண்ட் எச்சரிக்கை…!!!

அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…

21 minutes ago

“திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்!” – ஜப்பான் விடுத்த மிரளவைக்கும் எச்சரிக்கை.. பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம்…!

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…

24 minutes ago