“போடாத சாலைக்கு கோடி கோடியாய் பணம்”…. சிக்கிய திமுக அமைச்சர் எ.வ.வேலு… இரவோடு இரவாக நடந்த அதிர்ச்சி சம்பவம்… FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்….!

Spread the love

தமிழக முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின் பின்னணி என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்துள்ள விபரம் வெளியாகியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் தனியார் ஒப்பந்ததாரர்களும் கூட்டுச் சேர்ந்து, சாலைப் பணிகள் எதையும் மேற்கொள்ளாமலேயே மக்கள் பணத்தை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 20.04.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விரிவான புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உட்கோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘சங்கரானந்த் இன்ஃப்ரா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத சூழ்நிலையில், கடந்த 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் விதிகளுக்குப் புறம்பாக 3.23 கோடி ரூபாய் நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவலைப் புகாரில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த இமாலய முறைகேடு குறித்து நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும், தங்களின் இந்த குற்றத்திற்கான ஆதாரங்களை முழுமையாக அழிக்கும் நோக்கில், காவல்துறையின் பாதுகாப்போடு இரவோடு இரவாக அவசர அவசரமாக அங்கு சாலை அமைக்க அரசு அதிகாரிகளும் தனியார் ஒப்பந்ததாரரும் கூட்டுச் சேர்ந்து முயன்றதாகவும் அந்த புகாரில் பலத்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்த இந்த ஆதாரப்பூர்வமான புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு (பொதுத் துறை) கடந்த 23.06.2026 அன்று அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் ஜூன் 24, 2026 அன்று அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 10 பேர் மற்றும் ‘சங்கரானந்த் இன்ஃப்ரா’ தனியார் நிறுவனம் உட்பட மொத்தம் 11 தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் மீது கூட்டுச் சதி (120B), பொதுப் பணத்தை முறைகேடு செய்தல் (409), ஏமாற்றுதல் (420), போலி ஆவணங்கள் தயாரித்தல் (468, 471), குற்றத்திற்குத் தூண்டுதலாக இருத்தல் (109) ஆகிய இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதியப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

5 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

9 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

9 minutes ago

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

15 minutes ago

போடு ரகிட ரகிட… இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…

27 minutes ago

21 வயது பெண்ணின் மாடலிங் ஆசை… Whatsappல் வந்த அந்த ஒரு லிங்க்… சைபர் சைக்கோ செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!

பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…

31 minutes ago