தமிழ் சினிமாவிற்கு அற்புதமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் VZ துரை. குறைந்த அளவிலான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அத்தனை திரைப்படங்களும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் அளவிற்கு அழுத்தமான கதைக்களத்தை கொடுத்துள்ளார். இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இயக்குனர் பி இசட் துறை இயக்கிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகவரி:
கடந்த 2020 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து இவர் இயக்கி இருந்த திரைப்படம் தான் முகவரி. இந்தத் திரைப்படம் மூலமாகத்தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்த நிலையில் எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்த இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே துரை ரசிகர்கள் மத்தியில் ஒரு இயக்குனராக பாராட்டைப் பெற்றார்.
காதல் சடுகுடு:
முகவரி திரைப்படத்தை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு துறை இயக்கி இருந்த காதல் நகைச்சுவை திரைப்படம் தான் காதல் சடுகுடு. இந்த திரைப்படத்தில் விக்ரம், பிரியங்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொட்டி ஜெயா:
மூன்றாவதாக துரை இயக்கியிருந்த திரைப்படம் தான் தொட்டி ஜெயா. கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் மற்றும் கோபிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நேபாளி:
கடந்த 2008 ஆம் ஆண்டு துரை இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நேபாளி. இந்த படத்தில் பரத் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் அவருடன் இணைந்து மீரா ஜாஸ்மின், கோவிந்த், சங்கீதா மற்றும் பிரேம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
6 மெழுகுவர்த்திகள்:
கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆறு மெழுகுவர்த்திகள். இந்த திரைப்படத்தை துறையை இயக்கி இருந்த நிலையில் இப்படத்தில் நடிகர் ஷாமை ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டி இருந்தார். ஆறு தோற்றங்களுடன் ஆறு மாநிலங்களை சுற்றி ஒரு மர்மத்தை தீர்மானிப்பதாகத்தான் இந்த படத்தின் கதை அமைந்திருந்தது. இது ஒரு குழந்தை களத்தலை மையமாகக் கொண்ட திரைப்படம் ஆகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது.
ஏமாளி:
அடுத்ததாக துரை இயக்கத்தில் எம் லதா தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் ஏமாளி. இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி மற்றும் ரோஷினி பிரகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருட்டு:
கடந்த 2019 ஆம் ஆண்டு துறை இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இருட்டு. அமானுஷ்ய கதைக்களத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் துரை ஒரு கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.
நாற்காலி:
துரை இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாற்காலி. இந்த திரைப்படத்தில் அமீர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அரசியல் கலந்த படமான இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா தனது மூவ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தலைநகரம் 2:
கடந்த 2023 ஆம் ஆண்டு துறை இயக்கத்தில் வெளியான ஒரு குற்றவியல் திரைப்படம் தான் தலைநகரம் 2. இந்த திரைப்படத்தில் சுந்தர் சி, தம்பி ராமையா மற்றும் விஷால் ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 26 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் இந்த திரைப்படம். எஸ் எம் பிரபாகரன் தயாரித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…