#image_title
இண்டிய சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. தென்னிந்திய சினிமாவில் சாவித்ரி, சுஹாசினி, ரேவதி மற்றும் தற்போதைய சுதா கொங்கரா வரை பல பெண்கலைஞர்கள் சாதித்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை. இந்நிலையில் உலகளவில் இயக்குனராக சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலா பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை விஜய நிர்மலா. குழந்தை நட்சத்திரமாக மட்ச ரேகை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1964 ஆம் ஆண்டு வெளியான பார்கவி நிலையம் என்ற மலையாள திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
#
இவர் நடித்த படங்களிலேயே பணமா பாசமா இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்றளவும் கேட்டு ரசிக்கப்படும் எலந்த பயம் பாடலில் தோன்றியது இவர்தான். சிவாஜி கணேசனோடு பல படங்களில் கதாநாயகியாகவும் துணை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் சூப்பர்ஸ்ராராக விளங்கிய நடிகர் கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.
நடிகையாக பிஸியாக இருந்த போதே இவருக்கு இயக்கத்தில் ஆசை வரவே இயக்குனர் ஆனார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கில் மீனா என்ற படத்த இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கியதில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்கள்தான். 1983-ஆம் ஆண்டு இயக்கிய பெஸவாடா பெப்புலி தெலுங்குப் படத்தில் சிவாஜி நடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக தன்னுடைய சினிமா கேரியரில் 44 படங்களை இயக்கியுள்ளார்.
இதன் மூலம் உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். கடைசியாக 2009 ஆம் ஆண்டு நேரமு சிக்ஷா என்ற படத்தை இயக்கினார். இவர் இயக்கியதில் பல படங்கள் வசூல் ரீதியாக பெற்றுள்ளன.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய 73 ஆவது வயதில் காலமானார். இவரின் மகன் நரேஷ் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…