தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இறுதியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிராகவும் கல்விக் கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கதக்களமாக கொண்டிருந்தன. இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கி இருந்த இப்படத்தில் ரஜினியுடன் மஞ்சுவாரியார், ராணா, துஷாரா விஜயன் மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அமிதாப்பச்சன் நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினியுடன் இப்படம் மூலம் இணைத்து இருந்தார்.
இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்த நிலையில் வேட்டையின் திரைப்படம் குறித்து இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், படத்தின் நாயகனுக்கு பிடிக்காதவர்களும் தனக்கு பிடிக்காதவர்களும் இந்த படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்று விட்டனர். ஒரு படத்தில் விமர்சனம் என்பது எந்த நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது என்பது நாம் அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்வி. படங்கள் ரிலீஸ் ஆனாலும் அது குறித்த விமர்சனங்களை பார்க்கும் பழக்கம் அனைவருக்கும் வந்துள்ளது.
ஒருமுறை படம் மோசம் என்ற பார்வை ரசிகர்களுக்கு வந்து விட்டால் அதை மாற்றவே முடியாது. பெண் குழந்தைகளுக்கு கள்ளிபால் கொடுப்பது போலத்தான் இதுவும். பிடிக்காதவர்களின் படங்களுக்கு உடனே கள்ளிப்பால் ஊற்றும் மனப்பான்மை அநேகம் பேருக்கு உள்ளது. தன்னுடைய கருத்திற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்கள் தனக்கு எதிராக பேசத்தான் செய்வார்கள் என்பதை தான் இந்த மனநிலை காட்டுகிறது என்று ஞானவேல் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…